உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

துட்டகாமினி மற்றும் விஜயபாகுவின் படையெடுப்புக்கள்

துட்டகாமினியின் படையெடுப்பு

இலங்கை வரலாற்றில் துட்டகாமினி மன்னன் வரலாறு மிக முக்கியமானதாக கருதப்படுவது அவனுடைய சமயப் பணிகள் மட்டுமல்லாது அரசியல் சாதனையான எல்லாளனுக்கெதிரான படையெப்பினாலாகும்.

அனுராதபுரத்தினை நீதி தவறாது ஆட்சி செய்தவனை உருகுனையிலிருந்து படையெடுப்பை மேற்கொண்டான் பல இடங்களில் நடைபெற்ற போர்களை புறங்கண்ட காமினியின் படைகள் இறுதியாக அனுராதபுர நகரிலிருந்து 18 மைல் தொலைவில் முகாமிட்டது.

இரு பெரும் படைகள் போரிடுவதற்குப் பதிலாக எல்லாளனை நேருக்கு நேர் போரிட வருமாறு அறைகூவல் விடுத்தான் காமினி. அறை கூவலை ஏற்ற எல்லாளன் துட்டகாமினியுடன் கடுமையான போர் புரிந்தான். ஈற்றில் எல்லாளன் இறந்தான். ஒரு மாவீரனுக்கு கொடுக்க வேண்டிய மரியதை எல்லாளனுக்கு வழங்கப்பட்டது.

மாவம்சத்தில் துட்டகாமினியின் வரலாறு 10 அத்தியாத்தில் பாடப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதாநாயாகனாக துட்டகாமினி பல வரலாற்றுப் பேராசிரியர்களால் கருதப்படுகின்றது.

பின்வரும் படம் துட்டகாமினியின் படையெடுப்பை விளக்குகின்றது.

மன்னன் விஜயபாகுவின் படையெடுப்பு

இலங்கை வரலாற்றில் அந்நிய படையெடுப்பான சோழர் படையினை இலங்கையிலிருந்து வெளியேற்றினான் அந்த வகையில் சோழர் பேரரசின் படையினை முறியடித்தமை விஜயபாகுவின் சாதனையாகும்.

உருகுனையிலிருந்து படையெடுப்பை மேற்கொண்டான் ஆயினும் பல பிரச்சனைகளை சந்தித்த கீர்த்தி (விஜயபாகு) முதல் படையெடுப்பில் படுதேல்வியினை சந்திதான் ஆயினும் அத்தோல்வியினை தன் பாடமாக கொண்டு தன் இரண்டாவது படையெடுப்பினை இரு வழிகளில் மேற்கொண்டான்.

தீவிர முயற்சி மற்றும் தோல்வியில் கற்ற பாடத்தினை அடிப்படையாக கொண்டு தனது இரண்டாவது படையெடுப்பில் வெற்றி கொண்டான் விஜயபாகு.

பின்வரும் படம் மன்னன் விஜயபாகுவின் படையெடுப்பை விளக்குகின்றது.

இரு படையெடுப்புக்களும் உருகுணை இராச்சியத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டன என்பது தெளிவு.