எம்மை பற்றி


தமிழ்மொழியில் கற்கும் எமது மாணவர்களை புறந்தள்ளும் சூழல் பல இடங்களில் காணப்படுகிறது. கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிட்ட நிலையில் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க இந்தத் தளம் இடையறாது இயங்கும்.
தமிழ் மொழியில் கற்கும் பல மாணவர்கள் உரிய  வழி காட்டுதலின்றி பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் பாடசாலை நூல்களினை அடிப்படையாக கொண்டு பல முறைகளில் தொகுத்து அனைத்து பாடங்களினையும் ஓரிடத்தில் வழங்கும் முயற்சியே இந்த இணையதளம்.

தமிழ் வழியில் கல்வி கற்கும்  மாணவர்களுக்கு Online  Exams, வழிகாட்டுதல்கள், குறிப்புக்கள், படிக்க வேண்டிய நூல்கள், வினாத்தாள்கள், பயிற்சி வினாக்கள், காணொளிகள் ஆகியவற்றை பல ஆசிரியர்களின் உதவியோடு தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ்மொழியில் பயின்று பாடசாலை தேர்வுகளுக்குத் தயாராகிவரும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு உதவ இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது
மேலும் இதன் மூல ஆசிரியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
எமக்கு உங்கள் ஆதரவினை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.