பிரித்தானியரின் கீழ் இலங்கையில் பொருளாதார சமூக மாற்றங்கள்

பிரித்தானியரின் கீழ் இலங்கையில் பொருளாதார சமூக மாற்றங்கள்

 பாட கட்டமைப்பு

அறிமுகம்.

பொருளாதார மாற்றம்

பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி

            கோப்பி

            சிங்கோனா மற்றும் கொக்கோ

            தேயிலை

            தெங்கு

            இறப்பர்

சமூக மாற்றம்

            மத்திய தர வகுப்பினர் தோற்றம் பெற்றது.

தொழிளாலர் வகுப்பு தோற்றம்

கலாச்சார மாற்றம்

 

 


 

அறிமுகம்.

            பிரித்தானியர் இலங்கையினை கைப்பற்றி ஆட்சி செய்ய தொடங்கியது முதல் சுதந்திரம் அடையும் வரையான காலப்பகுதிக்குள் அரசியல், சமூக, பொருளாதார முறைகள் மாறியதோடு கலாச்சார பண்புகளும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

பொருளாதார மாற்றம்

ஐரோப்பியர்கள் அதிகமாக வர்த்தக பயிர்களில் ஈடுபட்டமையால் விவசாயம் முக்கியத்துவத்தினை இழக்க தொடங்கியது.

இதில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் வர்த்தக பயிர்களுடன் சிறு கைத்தொழில்களும் வளர்ச்சியடந்தது இதனால் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் ஆரம்பமாகியது.

மேலும் இவர்கள் காலத்தில் கண்டி சுதந்திர இராச்சியமாக இருந்தமையால் இலங்கையில் மரபு வழிப் சமூக பொருளாதார முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

சுயதேவை கிராமிய பொருளாதார முறையில் வாழ்ந்தனர் என கூறப்படுகின்றது.

இம் மக்கள் பரஸ்பரம், உதவி புரியும் பண்பு மற்றும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர்.

இக்காலத்தில் அத்தம் முறை (உழைப்புக்கு உழைப்பு) காணப்பட்டது.

எனவே பணப்புழக்கம் மிக அரிதாகவே காணப்பட்டது.

அரச நிலங்களை அனுபவிப்பது: அரசனுக்கு  சேவை செய்பவர்களுக்கு அரசன் நிலங்களை மானியமாக வழங்கியிருந்தான்.

இது பரவேணி எனப்பட்டது.

இராஜகாரிய முறை: நாட்டில் வயது வந்த ஆண்கள் அனைவரும் ஆண்டில் குறித்த சில நாட்கள் மன்னனுக்காக வேலை செய்ய வேண்டியிருந்தது இது இராஜகாரிய முறை எனப்பட்டது.

கோல்புறூக் ஆணைக்குழுவின் பொருளாதார சீர்திருத்தங்கள்

வருமானத்தை விட நிருவாக செலவு அதிகரித்தமையினாலே கோல்புறூக் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது.

இதனால் கோல்புறூக் குறைந்த வருமானத்தில் இலங்கையினை நிருவாகிக்க ஒரு திட்டத்தை வகுத்தது போல் இலங்கையின் வருமானத்தை அதிகரிக்க பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

இலங்கையின் வருமானத்தை பெருக்க அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டி இருந்தது அரசிடம் அப் பணம் இல்லமையினால் தனியார் துறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை முன்வைப்பது அவரது முக்கிய நோக்கமாக காணப்பட்டது.

வருமான வரிகளான

            மீன் வரி, மது வரி மற்றும் காணி வரி என்பன நேர் வரிகளாக மாற்றப்பட்டன.

அதாவது வரி அறவிடும் உரிமையினை ஏலத்தில் விற்கப்பட்டது இதற்கு பதிலாக படகுகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதன் மூலம் நேரடியாக அரசு வரி அறவிட முடியும் என வகுத்தார்.

வரி அறவிடப்பட்ட முறைகள்.

மீன் வரி; பிடிக்கப்படும் மீன்களின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டது.

காணி வரி: விலைச்சலில் ஒரு பகுதி வரியாக செலுத்தப்பட்டது. இக் காணி வரியினை நீக்கிவிட்ட அனைத்து நிலங்களுக்கும் சமவளவு வரி அறவிட பரிந்துரை செய்தார் கோல்புறூக்.

சேமிப்பு வங்கி ஒன்றை ஆரம்பிக்குமாறு அரசுக்கு சிபாரிசு செய்தார் கோல்புறூக். என்னெனில் பெருந்தோட்ட துறையில் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது அவரின் நோக்கமாகும்.

 


பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி

 கோல்புறூக் ஆணைகுழுவின் சிபாரிசு 1833ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன் பின் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் கண்டது.

தனியார் முயற்சிகளை ஊக்குவிப்பது இவருடைய நோக்கமாக காணப்பட்டது ஆயினும் இலங்கையில் அவ்வாறான பாரிய பணம் படைத்தவர்க்ள் இல்லை என அறிந்த கோல்புறூக் வெளிநாட்டு முதலீட்டாளகளை இலங்கை வந்து வர்த்தக பயிர்களை பெரும் தோட்டங்களில் செய்து அதிக லாபம் பெற முடியும் என அறிந்திருந்தார்.

இதன் விளைவாக 19ஆம் நூற்றாண்டில் இலங்கயில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை துரித வளர்ச்சி கண்டது.

            கோப்பி

ஒல்லாந்தர் காலத்தில் கரையோரத்தில் கறுவா பயிர்செய்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டமையால் கோப்பி மிக சிறிய அளவிலே மேற்கொள்ளப்பட்டது.

கோப்பி பயிர்செய்கை விருத்தியில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

1833 கோல்புறூக் சீர்திருத்தங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை வந்து கோப்பி பயிர்ச்செய்கையில் முதலீடு செய்தமை

ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தமை

கோப்பி செய்கையில் அதிக லாபம் கிடைத்தமை

கோப்பித் தோட்ட தொழிலாளர்கள் கட்டாய இரஜகாரிய முறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை.

கோப்பி பயிர்செய்கையின் விருத்தி.

1837 – 1847 கோப்பி பயிர்ச்செய்கை மிக வேகமாக வளர்ச்சியடைந்தது.

1834ஆம் ஆண்டு கோப்பி எற்றுமதி 1844 ஆம் ஆண்டு ஐந்து மடங்கு அதிகரித்தது.

1848ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியும் கோப்பி செய்கையினை பாரிய அளவு பாதித்தது.

1848 கோப்பி தோட்டங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது 

ஆனால் 1860 கோப்பி பயிருக்கு வெமீலியா வெல்டாக்ஸ் (Hemilia Vestatrix) எனும் இலை வெளிறல் நோயினால் கோப்பி முற்றாக வீழ்ச்சியடந்தது.

            சிங்கோனா மற்றும் கொக்கோ

கோப்பி வீழ்ச்சியினை தொடர்ந்து சிலர் சிங்கோன பயிர்ச்செய்கையில் ஈடுபட்னர்.

இது கோப்பிக்கான மாற்று பயிராக காணப்படவில்லை.

கோப்பியின் பின்னர் கொக்கோ பயிர்ச்செய்கைக்கு அரச அனுரசனை கிடைத்தது

ஆனால் கொக்கோ பயிருக்கு அதிக நிழல் தேவைப்பட்டது இதற்கு அதிக செலவு ஏற்பட்டது.

இதுவும் மாத்தளை பகுதியில் மட்டுமே சிறந்த விளைச்சலை பெற்றுத்தந்தது.

கொக்கோ உச்ச வளர்ச்சிக் காலத்தில் 12000 ஏக்கர் தாண்டவில்லை.

இதுவும் கோப்பிக்கான மாற்று பயிராக வெற்றியளிக்கவில்லை

 

            தேயிலை

கோப்பி விலை உலக சந்தையில் கூடிக் குறைய இதற்கான மாற்றுப் பயிர்களை மலையக மக்கள் முயற்சி செய்தனர்.

1967ஆம் ஆண்டு பெருந்தோட்ட உற்பத்தியாளர் சங்கம் சிலரை அசாமிற்கு அனுப்பி தேயிலை தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்தது.

இதற்கிடையில் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் லுல கந்துர எனுமிடத்தில் சில ஏக்கர் பரப்பில் தோயிலயினை மேற்கொண்டார்.

1894ஆம் ஆண்டளவில் 400 000 ஏக்கர் பரப்பில் தேயிலை மேற்கொள்ளப்பட்டது.

உலர் வலயம் தவிர 6000 அடிக்கும் உயரமான அனைத்து இடங்களிலும் தேயிலை பயிரிடக் கூடியதாக இருந்தது.

1930ஆம் ஆண்டளவில் 1200 தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டது.

தேயிலை விருத்திக்கான காரணங்கள்

சிறந்த விலை 

அனைத்து இடங்களிலும் தேயிலை பயிரிடக் கூடியதாக காணப்பட்டது.

நவீன இயந்திர வசதி

போக்குவரத்து அபிவிருத்தி

குறைந்த கூலிக்கு தொழிளார் வசதி 

             தெங்கு

தென்னை இலங்கையின் பண்டைய காலம் முதல் வீட்டு தோட்டங்களில் பயிரடப்பட்ட ஓர் பயிராகும்.

கோப்பி வீழ்ச்சியினை தொடர்ந்து தென்னை மீதும் கவனம் செலுத்தப்பட்டது இதன் விளைவே தெங்கு பயிர்ச்செய்கையின் வளர்ச்சியாகும்.

ஐரோப்பியரை விட இலங்கையர் தெங்கு அதிகமாக பயிரிட்டனர்.

1880 ஆண்டளவில் தெங்கு தோட்ட உரிமையாளர்கள் 65 சதவீதாமானோர் இலங்கயராக இருந்தனர்.

1920ஆம் ஆண்டு வருமானத்தில் 27% தெங்கு மூலம் பெறப்பட்டது.

தெங்கு இலங்கையில் பரவலடைந்தபோது லுணுவில எனுமிடத்தில் தெங்கு ஆராச்சி நிலையம் நிறுவப்பட்டது.

            இறப்பர்

இலங்கயில் 1877ஆம் ஆண்டு இறப்பர் பயிரப்பட்டது ஆயினும் அக் காலத்தில் உற்பத்தியாளர்கள் தேயிலை மீது கவனம் செலுத்தியமையால் இறப்பர் மீது கவனம் செலுத்தவில்லை.

20ஆம் நூற்றாண்டின் போது மோட்டார் வாகன கைத்தொழில் விருத்தியடைய உலக சந்தையில் இறப்பர் விலை அதிகரித்தது.

1920ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தில் 30% இறப்பர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பிற்காலத்தில் அகலவத்த டாட்டன் பீல்ட் எனுமிடத்தில் இறப்பர் ஆராச்சி நிலையம் அமைக்கப்பட்டது.

இறப்பர் பயிர்செய்கையின் விருத்திக்கு வித்திட்ட காரணிகள்

பொருத்தமான இறப்பர் இனத்தை தெரிவுசெய்து பயிரிட்டமை

தொழிநுட்பமான முறைகள் 

தேயிலை விலையின் வீழ்ச்சி

 


சமூக மாற்றம்

பிரித்தானியர் இலங்கையில் ஆட்சி செய்த காலத்தில் இலங்கையின் சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இச் சமூக மாற்றத்தினை பற்றிய சுருக்கமான விளக்கத்தினை இப் பகுதியில் பார்ப்போம்.

          மத்திய தர வகுப்பினர் தோற்றம் பெற்றது.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றமாக பழைய பிரபுக்கள் சமூக அந்தஸ்தினை இழப்பதும் புதிதாக மத்திய தர வர்க்கத்தினர் தோற்றம் பெற்று அவர்கள் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கோல்புறூக் முதலாளித்துவ பொருளாதார முறைக்கு வித்திட்டார். இதனால் பணம் சம்பாதிக்கும் வழிகள் திறப்பட்டன.

பெருந்தோட்ட தொழில்கள்

சாராய உற்பத்தி மற்றும் விநயோகம்

சாராய குத்தகை உரிமை

கரீயம் அகழ்தல்

சில்லறை மற்றும் மொத்த வியாபாரம்

போக்குவரத்து சேவை வழங்கள்

தென்னந்தோட்ட உரிமைகள்

என பல வழிகள் மூலம் பணமீட்ட அனைவருக்கும் வழியமைத்து கொடுத்தது கோல்புறூக் அவர்களின் திட்டம்.

            இதன் மூலம் இக் காலத்தில்

சட்டத்தரணிகள்

                        வைத்தியர்கள்

                        பொறியியலாளர்கள்

                        நில அளவையாளர்கள்

                        சிவில் சேவையாளர்கள்

                        எழுதுவினைஞர்கள்

                                    என பலர் தோற்றம் பெற்றனர்.

இவர்கள் பலர் புதிய தொழில் வாய்ப்புக்களுடன் உயர்வான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டனர்.

ஆங்கில கல்வியினை பெற்று அரச தொழில்களில் ஈடுபட்ட கல்வி கற்ற வகுப்பினருமே

தொழிளாலர் வகுப்பு தோற்றம்

            பிரித்தானியர் காலத்தில் இலங்கயில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மாற்றங்களால் தொழிலாளர் வகுப்பொன்று தோற்றம் பெற்றது.

இப் பகுதிகளில் தொழிலாளர் வகுப்பு ஒன்று தோற்றம் பெற்றது.

பொருட்களை ஏற்றி இறக்குதல்

            கை வண்டி மூலம் பொருட்களை கொண்டு செல்லல்

            பெருந்தெருக்கள் மற்றும் புகையிரத வீதிகள் அமைத்தல் என பல வேலைகளில் நகர்ப்புர கூலி தொழிலாளிகள் ஈடுபட்டனர்.

 

தொழிலாளர்களின் பிரச்சனைகள்

குறந்த சம்பளம்

வேலை நேரம் வரையறுக்கப்படவில்லை

தொழிலாள காப்புறுதியோ நட்டைஈடு வழங்குவதோ

தொழிலாளர் நலன்புரி நடவெடிக்களோ இல்லை

 

இதனால் தொழிளாலர்கள் பல போராட்டங்கள் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

பல தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டது.

தொழில் துறைகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தி தமது நிலையினைமேம்படுத்த முயற்சி செய்தனர்.

20ஆம் நூற்றாண்டில் 3ஆம் தசாப்தத்தில் தொழிலாளர்கள் சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டனர்.

ஏ.ஈ குணசிங்க அவர்கள் நகர் புற தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி தொழிற்சங்கத்தினை உருவாக்கிய முக்கிய தலைவர் ஆவார்.

1922 முதல் 1935 வரை சிறப்பாக செயற்படார்.

1922ஆம் ஆண்டு இவரால் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.

கலாச்சார மாற்றம்

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றமாக மேலைத்தேய கலாச்சர முறையின் தாக்கத்தினையே கொள்வோம்.

பலர் வெளிநாடுகளில் கல்வி கற்று நாடு திரும்பினர் இதன் போது அவர்களிடம் மேலை நாட்டு கலாச்சாரம் பரவியிருந்தது.

ஆடையணிகள், பழக்கவழக்கங்கள், வாழ்த்து வணக்கம் தெரிவிக்கும் முறைகள், கட்டட கலையம்சங்கள், உணவும் பாண வகைகள் என்பன இலங்கை கலாச்சாரத்துடன் கலந்து கொண்டது.

இவ்வாறு இலங்கை மக்களிடையே ஆங்கிலேயர் காலத்தில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டது.

பிரித்தானியர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவுகள்

பிரித்தானியர் இலங்கையினை 133 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இக் காலப் பகுதியில் இலங்கையில் ஆங்கிலேயர் அவர்களின் நன்மை கருதியே செயற்பட்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற அனைத்து செல்வங்களும் இக் காலத்தில் தாய்நாட்டிற்கு எடுத்து சென்றனர்.

எவ்வாறாயினும் இலங்கைக்கு பிரித்தானியரின் ஆட்சியில் சில நன்மைகள் உண்டானது என்பது உண்மயாகும்.

சர்வதேச மொழியான ஆங்கிலம் மொழியறிவு இலங்கையில் பரவியது

போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் துறை வளர்ச்சியடந்தது.

பாரளமண்ற ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.

மேலை நாட்டு கலாச்சார பரவலின் விளைவாக உள்நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் என்பன சீரழிவுக்கு உட்பட்டது.

மதுப்பாவனை நாடுமுழுவதும் பரவியது.

காணி உரிமையற்ற மக்கள் கூட்டம் உருவாகியமை.

மரபுரீதியான தன்னிறைவு பொருளாதார முறை வீழ்ச்சியடந்து தேசியரீதியான அறிவும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்

பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள்

கோல்புறூக் கரமன் யாப்பு                 1833

குறூமக்கலம் யாப்பு                    -           1910

மனிங் யாப்பு                                 -           1920

மனிங் டெவன்சயர் யாப்பு        -           1920

டெனமூர் யாப்பு                            -           1931

சோல்பரி யாப்பு                           -           1947

  

கோல்புறூக் கரமன் யாப்பு            1833

Colebrooke–Cameron Commission

ஆளுனர் சேர் ரொபர்ட் ஹேட்டன்


காரணம்:

1.     இலங்கையின் நிர்வாகத்திற்கு வருமானத்தினை விட அதிக செலவு ஏற்பட அதற்கு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது.

a.     அரசியல், மற்றும் பொருளியல் நிலையினை ஆய்வு செய்ய 1829ம் ஆண்டு டபிள்யூ. எச்.ஜீ கோல்புறூக் என்பவரும்

2.     நிதி மற்றும் சட்ட நடவெடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்ய.

a.     1830ம் ஆண்டு சார்ள்ஸ். எச் கமரன் என்பவரையும் குடியேற்ற நாடுகளின் செயலாளரால் அனுப்பப்பட்டனர்.

இவர்களுடைய ஆறிக்கை மற்றும் ஆலோசனைப்படி புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்று எழுத்தப்ப்ட்டது இதுவே கோல்புறூக் கமரன் யாப்பு எனப்பட்டது.

கண்டி மற்றும் கரையோரங்கள் ஒன்றினைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இலங்கயினை ஒரு நாடாக பிரகடனப்படுத்தி அதனை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

இது 1848 கலவரத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.

நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

வட மாகாணம்

தென் மாகாணம்

மேல் மாகாணம்

கிழக்கு மாகாணம்

மத்திய மாகணம்

 கட்டாய இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டது. 

அரசின் வர்த்தக ஏகபோக உரிமை அகற்றப்பட்டது.

மத்திய தர வர்க்கம் தோற்றம்.

 ஜோர்ஜ் வோல் என்பவர் இலங்கை சங்கத்தினை தோற்றுவித்தார்.

இலங்கயின் மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றமும் அவர்களின் கோரிக்கைகளும் புதிய யாப்பினை இலங்கையில் அமைக்க வழிவகுத்தது.

  1910 குறூ மக்கலம் யாப்பு.

இலங்கயில் இரண்டாவதாக அறிமுகப்படுத்திய யாப்பாகும்.

80 வருடங்களின் பின்னர் ஓர் அரசியல் யாப்பு மீண்டும் அமைக்கப்பட்டது. (இக் காலத்தில் சமூக பொருளாதார மாற்றங்கள் பல ஏற்பட்டன)

1908ம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஜேம்ஸ் பீரிஸ் என்பவர் புதிய அரசியல் சீர்த்திரத்ததின் தேவை பற்றிய அறிக்கை ஒன்றை குடியேற்ற நாடுகள் செயளாலரிடம் கையழித்தார்.

தொடர்ந்து பல இயக்கங்கள் இக் கோரிக்கையினை முன்வைத்தன.

1910 நவம்பர் மாதம் குடியேற்ற நாடுகளுன் செயலாளர் நாயகமான குறூ பிரபு மற்றும் இலங்கையின் ஆளுனர் மக்கலம் அவர்களும் புதிய யாப்பினை (குறூ-மக்கலம் யாப்பு 1912) அறிமுகப்படுத்தினார்கள்.

 யாப்பின் அம்சங்கள்

சட்டவாக்க கழகத்திற்கு முதன் முறையாக வாக்குரிமை மூலம் அங்கத்துவர்களை தெரிவு செய்தனர்.

இலங்கையருக்கான கல்வி கற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்

வக்குரிமை வரையறுக்கப்பட்டிருத்தல்.

            தகமை, சொத்து என்பன வாக்குரிமையில் செல்வாக்கு செலுத்தியது.

 ஆளுனரின் அதிகாரமே இவ் யாப்பின் பின்னரும் சட்ட சபையில் ஓங்கியிருந்தது.

 

மது ஒழிப்பு இயக்கம் 1912 - 1915

குறூ – மக்கலம் யாப்பு இலங்கையரின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இதனால் மத்திய தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர்.

1912 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மதுபானசாலைகள் அமைக்க அனுமதியளிக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்க்கும் இயக்கமாக இந்த மது ஒழிப்பு இயக்கம் தோற்றம் பெற்றது.


இந்திய தேசிய இயக்கத்தின் தாக்கம்

19ஆம் நூற்றாண்டில் இலங்கையினை போல் இந்தியாவிலும் பிரித்தானியர் ஆதிக்கத்தினை பெற்றிருந்தனர்.

1885ஆம் ஆண்டு இந்தியாவில் பல தலைவர்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்தனர் இதனால் 1918ஆம் ஆண்டில் சிறந்த அரசியல் சீர்திருத்தம் ஒன்றை ஆங்கிலேயர் வழங்கியிருந்தனர்.

சுரேந்திரநாத் பானாஜீ

பால கங்காதர திலகர்

மகாத்மா காந்தி

ஜவகர்லால் நேரு

ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள்

குடியேற்ற நாடுகளின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்துதல்

பிரித்தானியாவுக்கு முறைப்பாட்டு மனுக்களை முன்வைத்தல் போன்ற நடவெடிக்கைகளில் மாத்திரமே தமது அரசியல் சீர்த்திருத்தங்களை வேண்டி நின்றனர்.

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு  போன்றோர் இலங்கை வந்து மக்களுக்கு உரையாற்றி சில நாட்கள் தங்கியிருந்து சென்றனர்.

இதன் பின்னர் (1915) இலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை ஒழுங்கமைத்த இயக்கங்கள் மூலம் முன்னெடுத்தனர்.

இதன் தோற்றமே இலங்கை தேசிய சங்கமாகும்.

 

இலங்கை தேசிய இயக்கம்

1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லீம் கலவரத்தினை இராணுவ சட்டம் மூலம் கட்டுப்படுத்தியது பிரித்தானிய அரசு.

 இதன் பின்னர் நிர்வாக நடவெடிக்கைகளில் அதிக அதிகாரம் இலங்கையருக்கு இருக்க வேண்டும் என உணர்ந்தனர்.

 அதன் முயற்சியாக 1919ஆம் ஆண்டு அரசியல் போரட்டங்களை முன்னெடுக்க சக்திவாய்ந்த ஓர் குரலாக இருக்க, இலங்கையில் காணப்பட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பே இலங்கயின் தேசிய சங்கமாகும்.

 1915ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் முன்னனி அரசியல் போராட்ட தலைவராக இருந்த சேர். பொன் இராமனாதன் அவர்கள் இவ் இயக்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டர்.

 

  
மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம்  1920

 குறூ மக்கலம் அரசியல் யாப்பு சீர்திருத்ததில்திருப்தியடையாத இலங்கையர்களால் பல போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதம் விளைவாக 1920 ஆம் ஆண்டு ஆளுனர் மனிங் என்பவரால் ஓர் யாப்பு மேற்கொள்ளப்பட்டது.

முதல் முறையாக சட்டவாக்க கழகத்தில் உத்தியோக சார்பற்றோர் பெரும்பாண்மை

பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை

வரயறுக்கப்பட்ட வாக்குரிமை

இனவாரிப் பிரதிநிதித்துவ முறையும் காணப்பட்டது.

ஆளுனர் அதிகாரமே மேலோங்கி காணப்பட்டது.


1924 மனிங் டெவன்ஷயர் அரசியல் சீர்திருத்தம்.

 இச் சீர்திருத்தம் மூலம் சட்டவாக்க சபையில் உத்தியோக சார்பற்றவர் தொகை அதிகரித்தது மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

ஆட்சி நடாத்தும் அதிகாரம் ஆளுனரிடம் இருக்க

பெறுப்பு மக்கள் பிரதிநிதிகளான சட்டசபையிடம் இருந்தது (சட்ட சபையில் அதிக செல்வாக்கினை மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருந்தர்கள்)

இதனை அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சி முறை என அழைத்தனர்.


டொனமூர் அரசியல் சீர்திருத்தம் 1931

டொனமூர் பிரபுவின் தலைமையில் ஆணைக்குழு 1927ஆம் ஆண்டு இலங்கை வந்து மக்கள் கருத்துக்களை பெற்று சீர்திருத்தமொன்றை அறிமுகப்படுத்தியது.

இலங்கை ஆளுனரான கியூ கிளிபார்ட் அவர்கள் இலங்கையில் ஆட்சி நடாத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் எடுத்துக் கூறிய பின்னர்.

1927 ஆம் ஆண்டு டொனமூர் பிரபுவின் தலைமயில் ஓர் ஆணைக்குழு இலங்கையின் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்டது.

டொனமூர் குழுவினரின் வருகை

இவர்கள் இலங்கை மக்களிடையே காணப்பட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து கொடுத்து அறிக்கை மற்றும் ஆலோசனையின் அடிப்படையின் 1931 ஆம் ஆண்டு டொனமூர் எனும் அரசியல் அமைப்பு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

டொனமூர் விதந்துரைப்புகளில் முக்கிய விடயங்கள்

21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கியமை

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இலங்கை அரச சபையை அமைத்தமை

சுதேச மக்களுக்கு நிர்வாகத்தில் ஈடுபட நிர்வாகக் குழு முறையை ஏற்படுத்தியமை

உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கியமை


இலங்கை வரலாற்றில் மிக முக்கிய இடத்தினை பெற்ற இவ் யாப்பின் முக்கிய அம்சங்களை நோக்குவோம்.

இவ் யாப்பின் படி சட்டவாக்க கழகம் அரசுக்கழகமாகியதுடன் அங்கத்தவர்கள் தொகை 61 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன் பிரதிநிதிகள் பினவரும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமை இவ் யாப்பினுடைய முக்கிய அம்சமாகும்.

இதற்கு தலைமை வகிப்பவர் அரச கழகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் ஒருவராவர்.

டொனமூர் அரசாங்கசபையின் கட்டமைப்பு

மொத்த உறுப்பிர்கள் 61

சர்வசன வாக்குரிமை மூலம் 50 உறுப்பினர்

இனரீதியான நியமனம் 8 உறுப்பினர்கள்

உத்தியோக சார்புள்ளோர் 3 பேர்

பிரதம செயலாளர்.

நிதிச் செயலாளர்

சட்டத்துறை நாயகம்

அரசாங்க சபை சட்டங்களை ஆக்கும் அதிகாரம் பெற்றிருந்தது.

இச்சட்டங்களை அமுல்படுத்த தேசாதிபதியின் அங்கீகாரம் அவசியம்.

நிர்வாகக் குழு முறை

இலங்கையில் மந்திரிசபை முறையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சூழ்நிலையோ, அரசியல் கட்சிகளோ காணப்படவில்லை.

இருப்பினும் உள்நாட்டு மக்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகப் பொறுப்புக்களை வழங்கவே இது ஏற்படுத்தப்பட்டது

அரசாங்க சபையில் மொத்த உறுப்பினர்கள் 61 பேரில் 3 அரசாங்க உத்தியோகத்தர்களையும், சபாநாயகரையும் தவிர ஏனைய 57 உறுப்பினர்களும் (குறைந்தது 7 கூடியது 9 எனும் அடிப்படையில்) 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்டு 7 இலாகாக்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

உள்நாட்டலுவல்கள் -d.p ஜயதிலக்க

விவசாயமும் காணியும் -d.s சேனா நாயக்க

உள்ளுராட்சி-C.பட்டுவன் துடாவ

சுகாதாரம்- p.பான பொக்கை

கல்வி-c.w.w கன்னங்கர

போக்குவரத்தும் பொது வேலைகளும்-N.m.மாக்கான் மார்கர்

தொழில் கைத்தொழில் வர்த்தகம்.-p.சுந்தரம்

இம்முறையே நிர்வாகக்குழு முறை என அழைக்கப்படுகின்றது.


சுதந்திரமான கல்வி முறை

விவசாய குடியேற்ற திட்டங்கள் போன்ற பொதுமக்கள் சார்ந்த சேவைகள் செயற்படுத்தப்பட்டன.

ஆளுனரும் அரச திகாரிகளும்.

ஆளுனரின் அதிகாரம் பெருமளவில் குறைக்கப்பட்டமை இந்த அரசியல் யாப்பின் மற்றுமோர் சிறப்பம்சமாகும்.

ஆளுனர் அமைச்சர்களுடனும் அரசு கழகத்துடனும் ஒத்துழைத்து செயற்பட வேண்டியேற்பட்டது.

இவ் யாப்பின் குறையாக கருதப்படுவது.

நிதி, சட்ட நடவெடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவெடிக்கைகள் என்பன அரச அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தமையாகும். 

இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் பற்றி எமது அடுத்த பதிவில் காண்போம்

இலங்கை சுதந்திரம் அடைதல்

இப் பகுதி தரம் 11 மாணவர்களின் பாடப் புத்தகத்தினை மையப்படுத்தி தொகுக்கப்பட்ட இப் பதிவு தரம் 11 மாணவர்களுக்கு மட்டுமல்லாது உயர்தர மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுக்கப்பட்டுள்ளது


முதல் பதிவில் சுதந்திர இலங்கையின் கட்சிகளும் அவற்றின் தோற்றம் மற்றும் அக்கட்சிகள் எதிர் கொண்ட தேர்தல் களம் எனபன பற்றிய விளக்கம் .
இரண்டாம் பதிவில் சுதந்திர இலங்கையின் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிய விளக்கம் விளக்கப்பட்டுள்ளது.

1947 சோல்பரி அரசியல் சீர்திருத்தம். 1972 முதலாம் குடியரசு அரசியல் சீர்திருத்தம். 1978 இரண்டாம் குடியரசு அரசியல் சீர்திருத்தம்.

என்பன பற்றி இப் பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பதிவில் சுதந்திர இலங்கையின் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்திகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்ச்செய்கை
மகாவலி அபிவிருத்தி திட்டம் பற்றிய தொகுப்பு
வர்த்தக விவசாயம்
கைத்தொழில்
சிறு கைத்தொழில்கள்
என்பன பற்றிய தொகுப்பாக பதியப்பட்டுள்ளது.

நான்காம் பதிவில் சுதந்திர இலங்கையின் ஏற்படுத்தப்பட்ட கல்வி மற்றும் ஏனைய சமூக நலன்புரி நடவெடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

கல்வி அபிவிருத்தி

சமூக நலத் திட்டங்கள்

சுகாதார துறையின் அபிவிருத்திகள்

வைத்திய துறையின் வளர்ச்சி

போக்குவரத்து துறையின் வளர்ச்சி

ஏனைய நலத்திட்டங்கள்

என்பன பற்றிய தொகுப்பாக பதியப்பட்டுள்ளது.

எமது மாணவச்செல்வங்களுக்கு என்னால் முடிந்த வரை உதவுவதற்காகவே இம் முயற்சியினை மேற்கொண்டுள்ளேன்.
மாணவர்கள் தமது நண்பர்களுடன் பகிர்ந்து அனைவரும் பயன் பெற உதவுங்கள்.
கடந்த கால க.பொ.தா உயர் தர அரசியல் விஞ்ஞானம் பாட பரீட்சைகள்


இப் பகுதி இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இப் பகுதியானது கடந்த காலத்தில் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் வினவப்பட்ட பரீட்சைகளினை கொண்டு மாணவர்கள் இலவசமாக (Online Exam) நிகழ்வுப் பரீட்சைகளாக செய்து பார்க்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்கள் இப் பரீட்சைகளினை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் மூலம் நிச்சயமாகபல விடயங்களினை அறிந்து கொள்ளவும் இறுதிப் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற நிச்சயமாக உதவியாக இருக்கும். 

இப் பகுதியில் வடிவமைக்கப்பட்ட பரீட்சைகள் நேர கட்டுப்பாடு உடையவை அல்ல என்பது கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களின் நேர கட்டுப்பாட்டினை பேணி பயிற்சி செய்வது சாலச் சிறந்தது.

ஒவ்வொரு வருடமும் வினவப்பட்ட பகுதி 1 வினாக்களின் தொகுப்பே கீழே வழங்கப்பட்டுள்ளது.2019 ஆண்டு கா.பொ.தா உயர் தர அரசியல் விஞ்ஞானம் பாட பரீட்சை பகுதி 1

2018 ஆண்டு கா.பொ.தா உயர் தர அரசியல் விஞ்ஞானம் பாட பரீட்சை பகுதி 1

2017 ஆண்டு கா.பொ.தா உயர் தர அரசியல் விஞ்ஞானம் பாட பரீட்சை பகுதி 1குறிப்பு: பகுதி 2 வினாக்கள் விடைகளுடன் மிக விரைவில் பதிவேற்றப்பட்டும்.
கடந்த கால க.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சைகள்இப் பகுதி இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இப் பகுதியானது கடந்த காலத்தில் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் வினவப்பட்ட பரீட்சைகளினை கொண்டு மாணவர்கள் இலவசமாக (Online Exam) நிகழ்வுப் பரீட்சைகளாக செய்து பார்க்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்கள் இப் பரீட்சைகளினை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் மூலம் நிச்சயமாகபல விடயங்களினை அறிந்து கொள்ளவும் இறுதிப் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற நிச்சயமாக உதவியாக இருக்கும். 

இப் பகுதியில் வடிவமைக்கப்பட்ட பரீட்சைகள் நேர கட்டுப்பாடு உடையவை அல்ல என்பது கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களின் நேர கட்டுப்பாட்டினை பேணி பயிற்சி செய்வது சாலச் சிறந்தது.

ஒவ்வொரு வருடமும் வினவப்பட்ட பகுதி 1 வினாக்களின் தொகுப்பே கீழே வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை வரலாறு இலங்கை பட பயிற்சி 2019

2018 ஆண்டு கா.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1

இலங்கை பட பயிற்சி 2018

2017 ஆண்டு கா.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1

இலங்கை பட பயிற்சி 2017ஐரோப்பிய வரலாறு


2019 ஆண்டு கா.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1

ஐரோப்பா பட பயிற்சி 2019

2018 ஆண்டு கா.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1

ஐரோப்பா பட பயிற்சி 2019

2017 ஆண்டு கா.பொ.தா உயர் தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1

ஐரோப்பா பட பயிற்சி 2019


குறிப்பு: பகுதி 2 வினாக்கள் விடைகளுடன் மிக விரைவில் பதிவேற்றப்பட்டும்.
கடந்த கால க.பொ.தா உயர் தர பரீட்சைகள்
குறிப்பு: இப் பகுதி இன்னும் பூர்த்தியடையவில்லை என அனைவருக்கும் 

தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப் பகுதியில் தமிழ் மொழியில் கற்கும் சாதாரண தர மாணவர்கள் க.பொ.தா சாதரண தர பரீட்சைகளின் வினவப்பட்ட பரிட்சை வினாத்தாளகளை நிகழ்வு முறை மூலம் (ONLINE EXAMS) செய்யக் கூடிய வகையில் அமைத்துள்ளேன்.


பாடங்களை தெரிவு செய்த பின்னர் பரீட்சை வருடத்தினை தெரிவு செய்த பின் பரீட்சைக்கு நுழையலாம்.

கலைப் பிரிவு
தரம் 10 மாணவர்களுக்கான பரீட்சைகள்


குறிப்பு: இப் பகுதியும் இன்னும் முழுமையடையல்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப் பகுதியில் தரம் 11 மாணவர்களுடைய பரீட்சைகளினை பாட ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்
கணிதம்
விஞ்ஞானம்
ஆங்கிலம்
தகவல் தொடர்பாடலும் தொழிநுட்பவியலும்
வர்த்தகம்