Advance Level History Practical Class Online (Zoom)

Only limited Student https://www.tamilmesai.com/2025/10/15.html

வியாழன், 22 ஜனவரி, 2026

துட்டகாமினியின் 10 தளபதிகள் பற்றிய வரலாறு


அறிமுகம் 

காவந்தீசன் மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகளைக் கொண்ட பத்து இளைஞர்களே பத்துத் தளபதிகளாவர். காவந்தீசன் மன்னன் இந்தப் பத்துத் தளபதிகளையும் தலைவர்களாக நியமித்துஇ அவர்கள் ஒவ்வொருவரின் கீழும் 1000 வீரர்கள் பணிபுரியும் விதத்தில் தனது படையை ஒழுங்கமைத்தான். பத்துத் தளபதிகளின் விபரம் பின்வருமாறு.

  1. நந்தி மித்ர
  2. சுரநிமல
  3. மகாசோன
  4. கோதயிர்பர
  5. தேரபுத்தாபய
  6. பரண
  7. வேலுசுமன
  8. கஞ்ச தேவ
  9. புஸ்ஸ தேவ
  10. லபியவசப

1. நந்திமித்ர


இவனது உடல் வலிமையாலேயே முக்கியத்துவம் பெறுகிறான். அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாள மன்னனின் கீழ் மித்ர என்ற சிங்கள சேனாதிபதி ஒருவன் இருந்தான். அவனது தங்கைக்கு மகன் ஒருவன் பிறந்தான். குழந்தைப் பருவத்தில் அவனைத் தோல் பட்டியால் திரிகை கல்லுடன் இணைத்துக் கட்டிவிட்டுச் செல்வர். குழந்தை அக்கல்லை இழுத்துக் கொண்டு அங்குமிங்கும் தவழ்ந்து சென்றான். ஒரு நாள் வீட்டுக்கு அருகில் இருந்த மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனையூம் இவன் கழற்றி விட்டான். இவனது மாமாவின் பெயரால் “மித்ர” என்று அறிமுகமானதுடன்இ இடுப்பில் தோல் பட்டியால் கட்டப்பட்டதால் நந்தமித்ர எனப்பட்டான். பிற்காலத்தில் இவன் காவந்தீச மன்னனின் படையில் சேர்ந்தான். துட்டகைமுனு - எல்லாளன் யூத்தத்தில் இவன் பெரும் பணியாற்றியூள்ளான். ஒரு நாள் அரசன் அவனைப் பரீட்சிக்கும் பொருட்டுத் தனது யானையை அவனிடம் அனுப்பவே அவன் தன் பலத்தால் யானையின் தந்தங்களைப் பிடித்து அதனை அமரச் செய்தான்.


2. சுரநிமல

காவந்தீச மன்னனின் படையின் ஆணையிடும் அதிகாரியான தீகாபயன்இ தம் படைக்கு இளைஞர்களைத் தேடிக் கொண்டிருக்கும் போதுஇ கசாத்தோட்டையில் கடவிட்டிய என்ற ஊரில் சங்க என்ற செல்வந்தனின் ஏழு மகன்மாரில் ஒருவனான நிமல என்பவன் தீகாபயனிடம் அனுப்பப்பட்டான். இவன் வீட்டில் எதுவித வேலையூம் செய்யாதவன். நிமல தீகாபயனைச் சந்தித்தான். அவன் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்தையூம்இ தன்னிடம் வந்த நேரத்தையூம் கணக்கிட்டு அவனது நடை வேகத்தை கண்டு ஆச்சரியப்பட்டான். தீகாபயன் இவனது திறமையை அடிக்கடி பரீட்சித்தான். மிகின்தலையிலிருந்த பிராமணனுக்கு ஒரு கடிதத்தை நிமலவிடம் கொடுத்தனுப்பினான். மிகக்குறுகிய நேரத்தில் அவன் அவ்விடத்தை அடைந்தான். இதனால் குண்டல என்ற பிராமணனும் நிமலவின் திறமையைக் கண்டு வியந்தான். நிமலவின் திறமையால் அவன் காவந்தீச மன்னனிடம் அனுப்பப்பட்டான். அவனது திறமையைக் கண்ட மன்னன் அவனுக்கு சுரநிமல எனப்பெயரிட்டான். எல்லாளன் - துட்டகைமுனு யூத்தத்தில் குதிரையோட்டியாக இருந்து திறம்பட செயல்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

3. மகாசோன

இவன் மல்வத்து ஓயாப் பிரதேசத்தில் ஷுஹன்திரிவெவ எனும் ஊரில் பிறந்தான். இவ்வூ+ரில் இருந்த திஸ்ஸ என்ற பிரதானியின் எட்டுப் பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாகிய இவன் சோன என அறிமுகமானான். இவன் ஏழு வயதிலேயே தனது உயரத்தைக் கொண்ட பனை மரங்களையூம்இ பத்து வயதில் பெரிய பனை மரங்களையூம் எவ்வித சிரமமுமின்றி பிடுங்கி விடும் திறனைக் கொண்டிருந்தான். இதனால் ஊர் மக்கள் இவனை மகாசோன என்று அழைத்தனர். இவனது உடல் வலிமையை கேள்வியூற்ற காவந்தீச மன்னன் அவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான்.

4. கோதயிம்பர

இவன் கிரி என்ற பிரதேசத்தில் நினெமொல்பிட்டிய என்ற இடத்தில் பிறந்தான். இவன் ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவன் ஆவான். இவன் உருவத்தில் சிறியவனாக இருந்ததால் (குள்ளனாக) இவனைக் “கோதயா” என அவனது சகோதரர்கள் அழைத்தனர். அவனது சகோதரர்கள் வயலில் வேலை செய்யூம் வேளையில் இவன் சோம்பேரியாகவே இருந்தான். ஒரு நாள் இவனது சகோதரர்கள் உழுந்து பயிரிடுவதற்காக வயலைத் துப்புரவூ செய்தனர். ஒரு பகுதியைத் துப்புரவூ செய்யாது விட்டனர். வீட்டிற்கு வந்த அவர்கள் தமது தம்பியை அப்பகுதியை துப்புரவூ செய்யூம்படி கூறினர். அவன் ஒரே நாளில் அப்பகுதியைத் துப்புரவூ செய்துஇ வேலி அடைத்துப் பயிர் செய்வதற்கு நிலத்தைத் தயார் செய்து விட்டு வீடு சென்றான். இவனது சகோதரர்கள் வந்து பார்த்து விட்டு ஆச்சரியமடைந்தனர். இவ்வாறு வியத்தகு செயல்களை செய்ததால் அவன் கோதயிம்பர என்ற பெயரினைப் பெற்றான். இவனது தீரச் செயல்களைக் கண்ட காவந்தீச மன்னன் இவனைத் தனது படையில் சேர்த்துக் கொண்டான்.

5. தேரபுத்தாபய


கொட்டகல என்ற இடத்திற்கு அருகில் கித்திகம என்ற ஊரில் ரோஹன என்ற தலைவன் இருந்தான். அவனுக்கு அபய என்றொரு மகன் இருந்தான். இவன் 10 - 12 வயதில் விசேட பலம் வாய்ந்தவனாக காணப்பட்டான் ஏழுஇ எட்டுப் பேர் சேர்ந்து தூக்கும் கருங்கல்லையூம் தனியாகவே தூக்கி எறிவான். பத்து வயதில் மரத்தை அசைத்து மரங்களிலுள்ள காய்களைக் கீழே விழச்செய்வான். இவனது பலத்தைக் கண்ட மன்னன் இவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான். இவனது தந்தை பிற்காலத்தில் பிக்குவாக மாறினார். அவர் தேரராக மாறியதால் தேரரின் மகன் எனப்படும் தேரபுத்தாபய என்று அழைக்கப்பட்டலானான்.

6. பரண


கப்கந்துரு என்ற ஊரில் பிரதானி ஒருவன் இருந்தான். அவனின் மகனின் பெயர் பரண என்பதாகும். சிறு வயது முதல் உடல் வலிமையூடையவனாக இருந்தான். அயலவர் அவனது வலிமையைக் கண்டு வியந்தனர். பத்து வயதாகும் போது அவன் மரைஇ காட்டுப் பன்றி என்பவற்றை பின்தொடர்ந்து சென்று அவைகளைப் பிடித்துக் கொல்வான். அவனது வலிமையைக் கேள்வியூற்ற மன்னன் அவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான். இவனது வலிமையால் மானபரண எனும் பெயரால் அறிமுகமானான். துட்டகைமுனுவின் சேனையில் இவன் பிரதான தளபதியாகப் பணியாற்றினான்.

7. வேலுசுமன


வசப எனும் கிராமத் தலைவனுக்கு வேலுஇ சுமன எனும் இரு நண்பர்கள் இருந்தனர். வசபனின் மனைவிக்கு மகன் பிறந்த வேளையில் பிள்ளையைப் பார்ப்பதற்கு வேலுஇ சுமன என்ற அவனது நண்பர்கள் வந்தனர். வசபன் மகிழ்ச்சியடைந்தான். தன் பிள்ளையைப் பார்க்க வந்ததால் பிள்ளைக்கு அவர்கள் இருவரின் பெயரையூம் இணைத்து வேலுசுமன எனப் பெயரிட்டான். பிள்ளை வளர்ந்ததும் உடல் வலிமை கொண்டவனாக விளங்கினான். தலைவன் ஒருவனிடம் இருந்த எவராலும் அடக்க முடியாத குதிரையை இவன் அடக்கினான். எவரையூம் தன் முதுகில் ஏற விடாத அக்குதிரையின் மீது ஏறினான். அவனைக் கீழே வீழ்த்தும் பொருட்டு குதிரை சுற்றி சுற்றி ஓடியது. வேலுசுமன அதன் மீது அமர்ந்தவாரே தனது தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை கழற்றி அதனை உயர்த்திக் காட்டினான். எவராலும் அடக்க முடியாத இக்குதிரையை வேலுசுமன அடக்கியதைக் கண்ட உரிமையாளன் அவனை மன்னனிடம் அனுப்பினான். மன்னன் அவனது உடல் வலிமையைப் பரீட்சித்து அவனைத் தன் படையில் சேர்த்துக் கொண்டான்.

8. கஞ்சதேவ



இவன் மகேந்திர துரோணி எனும் ஊரில் வாழ்ந்த அபய எனும் தலைவனின் மகனாவான். பிறப்பிலேயே கால் ஊனமுற்றிருந்ததால் கஞ்சதேவ என அழைக்கப்பட்டான். அவனது உடல் வலிமைக்குக் கால் ஊனம் ஒரு தடையாக இருக்கவில்லை. நண்பர்களுடன் காட்டிற்குச் சென்று மான்இ மரை என்பவற்றிற்குப் பின்னால் ஓடி அவைகளின் கால்களைப் பிடித்து சுழற்றும் அளவிற்கு அவன் திறமையூடையவனாக இருந்தான். அவனது உடல் வலிமையை அறிந்த மன்னன் அவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான். துட்டகைமுனு - எல்லாளன் யூத்தத்தில் இவனது பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெற்றது.

9. புஸ்ஸதேவ

சித்துல்பவ்வ என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் உத்பல எனும் பிரதானி ஒருவன் இருந்தான். அவனது மகனின் பெயர் புஸ்ஸதேவ என்பதாகும். பிள்ளைகளிடையே சிறு வயது முதலே அவன் சிறப்புப் பெற்றிருந்தான். ஒரு நாள் விகாரைக்குச் சென்ற அவன் அங்கிருந்த சங்கை எடுத்து ஊதினான். அதன் ஒலியால் அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். அவனது தந்தை மகனின் திறமையைக் கண்டு அவனுக்கு வில்வித்தையைக் கற்றுக்கொடுத்தார். வில்வித்தையில் அவன் சிறந்து விளங்கினான். ஒலியினதும்இ திசையினதும் இயல்பிற்கு அமையக் குறிப்பாக அம்பு நீண்ட தூரம் சென்றது. இவனது திறமையை அறிந்த காவந்தீச மன்னன் இவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான். துட்டகைமுனு - எல்லாளன் யூத்தத்தில் இவன் சிறப்பாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. எல்லாளனின் படையில் இருந்த பல்லுக என்ற தமிழ்த் தலைவன் இவனது அம்பால் கொல்லப்பட்டான். இந்த அம்பு துட்டகைமுனுவின் உயிரைக் காப்பாற்றியது.

10. லபியவசப


வெஹரவெகம மித்த என்ற பிரதானிக்கு வசப என்ற மகன் இருந்தான். அழகிய உருவத்தைப் போலவே உடல்வலிமை கொண்டவனாகவூம் இருந்தான். அழகான தோற்றமுடையவனாக இருந்ததால் “லபியவசப” எனப்பட்டான். இவன் மிக விரைவாக வேலை செய்யக்கூடியவன். இவனது திறமையைக் கண்ட மன்னன் இவனையூம் தன் படையில் சேர்த்துக் கொண்டான். துட்டகைமுனு - எல்லாளன் போரில் இவன் சேனாதிபதி வரை உயர்வூ பெற்றான்.


படங்கள் உருவாக்கம் Google Ai tools


1 கருத்து:

Blogger இயக்குவது.