கண்டி இராச்சியம்

கண்டி இராச்சியத்தின் அமைவிடம்?

கண்டி இராச்சியம் இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் செங்கடகல என அழைக்கப்பட்டது.

சிதுருவான (உடு நுவர/ உடபலாத்த)இ பலவிட்ட (ஹரிஸ்பத்துவ), மாத்தளை, தும்பறை, சகமதுன்ரட்ட (வலப்பன/ ஹேவாஹெட்ட)

பஞ்ச மலைநாடுஇ செங்கடகல இராச்சியம்இ ஸ்ரீவர்த்தன புரஇ கண்டிஇ மஹநுவரஇ செங்கடகலபுரய என்பன கண்டி இராச்சியத்தின் மறுபெயர்களாகும்

இலங்கையின் கரையோரம் அந்நியர் ஆட்சிக்குட்பட்ட காலத்திலும் கண்டி இராச்சியம் தனது சுதந்திரத்தை பாதுகாத்து நின்றது.

காரணம் இதன் அமைவிடம்இ மலைகள்இ நதிகள்/ நீர் நிலைகள் மற்றும் காடுகள் என பல இயற்கையான பாதுகாப்பு அரண்களை கொண்டு காணப்பட்டது.

கண்டி நகருக்கு பாதுகாப்பு வழங்கிய நதி மகாவலி கங்கை ஆகும்.

பல சூழ்சிகளினை மேற்கொண்ட ஆங்கிலேயர் தங்களின் பிரித்தாளும் கொள்கையாலும், தந்திரத்துடனும் செயற்பட்டு கண்டி இராச்சியத்தினை 1815ம் ஆண்டு கைப்பற்றினார்கள்.

கண்டி இராச்சியத்தின் தோற்றம்?

6ம் பராக்கிரமபாகு (ஜோதிய இளவரசன்)
ஆரம்ப காலத்தில் உருகுனை போல மலை நாடான கண்டி இராச்சியத்தினையூம் பல இலங்கை மன்னர்கள் பாதுகாப்பினை கருதி இங்கு வந்து படைநடவெடிக்கையிகளில் ஈடுபட்டனர்.

கண்டி இராச்சியம் 15ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றது.

6ம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராசதானியினை ஆட்சி செய்த போது கண்டி பிரதேசத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஜோதிய எனும் இளவரசனை அதற்குப் பெறுப்பாக நியமித்தான்.

ஜோதிய இளவரசன் 6ம் பராக்கிரமபாகு மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட கிளர்ச்சி செய்த போதும் அது 6ம் பராக்கிரபாகு மன்னனால் கட்டுப்படுத்தப்பட்டது.

கண்டி இராச்சியத்தின் எழுச்சி மற்றும் மன்னர்கள்?

6ம் பராக்கிரமபாகு (ஜோதிய இளவரசன்)

கண்டி இராச்சியம் 15ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றது.

6ம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராசதானியினை ஆட்சி செய்த போது கண்டி பிரதேசத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஜோதிய எனும் இளவரசனை அதற்குப் பெறுப்பாக நியமித்தான்.

ஜோதிய இளவரசன் 6ம் பராக்கிரமபாகு மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட கிளர்ச்சி செய்த போதும் அது 6ம் பராக்கிரபாகு மன்னனால் கட்டுப்படுத்தப்பட்டது. இக்கிளர்ச்சியினை கட்டுப்படுத்த அனுப்பப்பட்டவன் இளவரசன் அம்புலுகல குமாரன் ஆவான்.

சேனா சம்மத விக்கிரமபாகு (1469 – 1511)

1469ம் ஆண்டு சேனாசம்மத விக்கிரமபாகு கிளர்ச்சி ஒன்றை செய்து கண்டி இராச்சியத்தினை விடுவித்துக் கொண்டு தனி இராச்சியமாக ஆட்சி செய்தான்.

இக் காலத்தில் கண்டி இரச்சியமானது கம்பளைஇ சிதுறுவானஇ தெநுவரஇ பலவிடஇ மாத்தளைஇ பன்சிய பத்துவஇ ஊவா ஆகிய பகுதிகளே கண்டி இராச்சியமாகும்.

கண்டியினை சுதந்திர இராச்சியமாக்குவதில் வெற்றி கொண்டான்.

இவனுடைய காலத்திலே போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்திற்குள் வந்தனர் (1505ம் ஆண்டு).

ஜயவீர பண்டாரன் (1511 - 1551)

சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனாவான்.

கரலியத்தபண்டாரன் (1551 - 1582)

ஜயவீர பண்டாரவின் மகனாவான். இவன் போர்த்துகோயருக்கு ஆதரவான முறையில் நடந்து கொண்டான்.

1ம் இராஜசிங்கன் (சீதாவாக்கை மன்னன்) (1582 - 1591)

கண்டியின் அரசப் பிரதிநிதியாக (சான்மத) வீர சுந்தர பண்டார என்பவனை நியமித்தான்.

வீர சுந்தர பண்டார இராஜசிங்கனுக்கு எதிராக நடந்தான் என கூறி அவனை கொலை செய்தான் 1ம் இராஜசிங்கன்.

கண்டி இராச்சியமும் போர்த்துக்கோயரும்

யமசிங்க பண்டாரன் (1592)

1ம் விமதர்ம சு+ரியன் (1592 – 1604)

செனரத் (1604 - 1635)

கண்டி இராச்சியமும் ஒல்லாந்தரும்

2ம் இராஜசிங்கன் (1635 - 1687)

2ம் விமலதர்ம சு+ரியன் (1687 - 1707)

ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் (1707 - 1739)


நாயக்க வம்ச மன்னர்கள்

ஸ்ரீ விஜய இராஜசிங்கன் (1739 - 1747)

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1747 - 1781)


கண்டி இராச்சியமும் ஆங்கிலேயரும்

இராஜாதி இராஜசிங்கன் (1781 - 1798)

கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சி

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் (1798 - 1815)

சரியான தருனம் பார்த்திருந்த ஆங்கிலேயர் 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியத்தினை மிக இலகுவாக வெற்றி கொண்டனர்.


முழுமையான வரலாற்றினை பெற்றுக்கொள்ள Link ஐ அழுத்தவும்