இலங்கையின் பண்டைய தலைநகரங்கள்

இலங்கை வரலாற்றில் இலங்கையின் தலைநகரங்கள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றம் பெற்று வந்தது.
இலங்கையின் முதல் தலைநகரமாக அனுராதபுரம் விளங்கியது.
கி.மு 377ம் ஆண்டிலிருந்து கி.பி 1017ம் ஆண்டு வரை அனுராதபுரம் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.

கி.பி 477ம் ஆண்டு தொடக்கம் கி/பி 495ம் ஆண்டு வரை தாதுசேனனின் மகனான காசியப்பன் சீகிரியாவினை இலங்கையின் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். அதன் பின் மீண்டும் அனுராதபுரம் இலங்கையின் தலைநகரமாக்கப்பட்டது.

கி.பி 1017ம் ஆண்டில் இலங்கை சோழர் வசமானது இவர்களால் இலங்கையின் தலைநகரம் பொலநறுவைக்கு மாற்றப்பட்டது. அன்று முதல் 1212ம் ஆண்டு கலிங்க மாகன் படையெடுப்பு வரை பொலநறுவை இலங்கையின் தலைந்கரமாக விளங்கியது.

அதனை தொடர்ந்து தலைநகரங்கள் தென்மேற்கு நோக்கி மாற்றம் பெற்றன.


கி.பி 1215 முதல் கி.பி 1345 வரை தம்பதெனிய

கி.பி 1272 முதல் கி.பி 1284 வரை யாப்பகூவ

கி.பி 1300 முதல் கி.பி 1341 வரை குருணாகல்

கி.பி 1341 முதல் கி.பி 1408 வரை கம்பளை

கி.பி 1408 முதல் கி.பி 1694 வரை கோட்டை 

கி.பி 1521 முதல் கி.பி 1594 வரை சீதாவாக்கை (சீதாவக்கை இரச்சியம்)

கி.பி 1496 முதல் கி.பி 1815 வரை கண்டி (கண்டி இரச்சியம்)

கி.பி 1215 முதல் கி.பி 1621 வரை யாழ்ப்பாணம் (யாழ்ப்பாண இராச்சியம்)

இறுதியாக தலைநகர் கோட்டைக்கு மாற்றப்பட்டது.

கோட்டை இராச்சியம் அந்நியர் ஆட்சிக்குட்பட சீதாவக்கைகும் பின்னர் கண்டிக்கும் மாற்றப்பட்டது.

பின்வரும் படம் இலங்கையின் தலைநகர்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும்.